சாலை விபத்தில் பெற்றோர் கண் முன்னே மகன் பலி

அம்மையநாயக்கனூர் அருகே கூலி படம் பார்த்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றபோது நடந்த சாலை விபத்தில் பெற்றோர் கண் முன்னே மகன் பலி, தந்தை - தாய் படுகாயம்;

Update: 2025-08-19 05:08 GMT
திண்டுக்கல் அம்மைநாயக்கனூரை அடுத்த கண்ணார்பட்டி சேர்ந்த தந்தை ஜனாபாண்டியன், தாய் பிரியா, மகன் புகழ்தரண்(9) ஆகியோர் கூலி படம் பார்த்துவிட்டு இருசக்கரவாகனத்தில் கொடைரோட்டில் இருந்து அம்மையநாயக்கனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற மினி லாரி மீது இருசக்கர வாகன மோதி விபத்து இந்த விபத்தில் மகன் புகழ்தரண் பெற்றோர் கண் முன்பே சம்பவ இடத்திலேயே பலியானார். தந்தை ஜனாபாண்டியன், தாய் பிரியா இருவரும் படுகாயம் அடைந்து திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் அனுமதி மேற்பட்ட சம்பவம் குறித்து அம்மைநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெய பாண்டியன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News