இரை தேடி ஊருக்குள் புகுந்த ஆண் புள்ளி மான் பலி
கோபால்பட்டி அருகே இரை தேடி ஊருக்குள் புகுந்த ஆண் புள்ளி மான் பலி;
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே கணவாய்பட்டி கரந்த மலை பகுதியிலிருந்து ஆண் புள்ளிமான் ஒன்று இரை தேடி கோபால்பட்டி அருகே கணவாய்பட்டி பங்களா பகுதிக்குள் நுழைந்தது. இதை கண்ட தெரு நாய்கள் புள்ளிமானை துரத்தியது. நாய்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய புள்ளிமான் அப்பகுதியில் உள்ள கல் துாண் மீது மோதி இறந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு ஆண் புள்ளி மானை பரிசோதனை செய்து வனப்பகுதிக்குள் புதைத்தனர்.