வாசுதேவநல்லூர் அருகே விஷம் குடித்து லாரி ஓட்டுநர் தற்கொலை

விஷம் குடித்து லாரி ஓட்டுநர் தற்கொலை;

Update: 2025-08-19 07:04 GMT
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சங்குபுரம் பெரிய கோயில் தெருவைச் சேர்ந்த கனகராஜ் (64), இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கு பல மாதங்களாக உடல்நலக் குறைவால் அறுவை சிகிச்சை செய்து, மனமுடைந்த நிலையில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதைக் கண்ட அவர் மனைவி இந்திராராணி மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News