எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-08-19 11:02 GMT
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று கள்ளர் மகா சங்கம், போர்க்குடி முக்குலத்தோர் ஆன்மீக பேரியக்கம் , முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை ஆகியவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு கள்ளர் மகா சங்கத் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். காவி புலிப்படைத் தலைவர் சி.பி.போஸ், சிவசேனா மாநில செயல் தலைவர் சசிகுமார் , பசும்பொன் தேசிய கழக மாநில செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முக்குலத்தோர் பாசறை தலைவர் சிற்றரசு தேவர் கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை முக்குலத்தோர் ஆன்மீக பேரியக்க நிறுவனத் தலைவர் தேவர் பெர்னாட்ஷா செய்திருந்தார் . இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ளர் பள்ளி மற்றும் மாணவர் விடுதிகளை சமூக நீதி பள்ளி மற்றும் சமூக நீதி விடுதி என பெயர் மாற்றம் செய்வதை கண்டித்தும் , எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பட்டிமன்ற நடுவர் வழக்கறிஞர் பூபதி , தமிழ்நாடு கள்ளர் மகா சங்கம் துணைத் தலைவர் நல்லதம்பி , தொழிலதிபர் கருணாநிதி , அனைத்து கள்ளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் , பா.ஜ.க முன்னாள் மாநில விவசாய சங்க செயலாளர் ராஜப்பா, கள்ளர் இளைஞர் பேரவை கர்ணன் , அகில இந்திய பார்வர்டு பிளாக் திருச்சி மாவட்ட செயலாளர் காசி மாயன், தஞ்சை மாவட்ட செயலாளர் சரவண காங்கேயர், தமிழ்நாடு கள்ளர் மகா சங்கம் திருவாரூர் மாவட்ட செயலாளர் வேலாயுதம் , மூ.மு.க. தஞ்சை செயலாளர் அம்பிகாபதி , நேதாஜி நல சங்கம் சபரி, பசும்பொன் பாசறை பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை ஒருங்கிணைப்பாளர் அனந்த் நன்றி கூறினார்.

Similar News