உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா பார்வையிட்டார்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.;

Update: 2025-08-19 13:35 GMT
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், அல்லாலப்பேரி கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, பெறப்படும் மனுக்கள், இணையத்தில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார். உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோவிலாங்குளம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், குச்சம்பட்டி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், அல்லாலப்பேரி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், ஆனைக்குளம், சிவகாசி மாநகராட்சி வார்டு எண் 13, இராஜபாளையம் நகராட்சி வார்டு எண்-11 ஆகிய 6 இடங்களில் நடைபெற்றது. அதன்படி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், அல்லாலப்பேரி கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். மேலும், முகாமின் மூலம் பட்டா வேண்டி மனு அளித்து தீர்வு பெற்றவர்களுக்கு பட்டா நகலினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து தங் களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்தார்.

Similar News