வாக்குப்பதிவு இயந்திர குடோன் திறப்பு : ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர குடோன் லிப்ட் பழுது நீக்கும் பணிக்காக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்லைவர் க.இளம்பகவத் முன்னிலையில் திறக்கப்பட்டது. ;

Update: 2025-08-19 13:38 GMT
தூத்துக்குடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர குடோன் லிப்ட் பழுது நீக்கும் பணிக்காக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்லைவர் க.இளம்பகவத் முன்னிலையில் திறக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் அமைந்துள்ள பொருட்கள் கொண்டு செல்லும் லிப்ட் ஆனது டிசம்பர் 2023 ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமான பழுதடைந்த நிலையில் வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ஐ முன்னிட்டு பழுது நீக்க தலைலை தேர்தல் அதிகாரி சென்னை அவர்களிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில் அனுமதி பெறப்பட்டு இன்று (18.08.2025) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையானது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திறக்கப்பட்டு 2023ம் ஆண்டு பெரு வெள்ளத்தில் பாதிப்படைந்த பழுதூக்கி (லிப்ட்) இயந்திரங்கள் ஆனது பொதுப்பணித் துறையினரால் பழுது பார்க்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இப்பணியானது தொடர்ந்து 15 நாட்களில் நிறைவடையும். இப்பணிகள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடைபெறவிருக்கிறது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்லைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார். இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் அக்னல் (தி.மு.க தெற்கு), A.சகாயராஜா (அ.இ.அ.தி.மு.க தெற்கு), S.சீனிவாசன் (தி.மு.க வடக்கு), D.ராஜா (சி.பி.ஐ.எம் மாவட்ட செயற்குழு), R.செந்தில்குமார் (பி.ஜே.பி தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைத்தலைவர்), S.சிவராமன் (பி.ஜே.பி தூத்துக்குடி வடக்கு தெற்கு துணைத்தலைவர்), R.முத்துமணி (காங்கிரஸ் தெற்கு), N.G.ராஜேந்திரன் (அ.இ.அ.தி.மு.க வடக்கு), R.டிலைட்டா ரவி (வி.சி.க மாவட்ட செயலாளர்), தொ.அலங்கார சகாயம் (நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் தென் கிழக்கு), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சேதுராமலிங்கம், தேர்தல் வட்டாட்சியர் தில்லைபாண்டி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Similar News