சிவகாசியில் குடியிருப்பில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஒருவர் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்....
சிவகாசியில் குடியிருப்பில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஒருவர் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்....;
சிவகாசியில் குடியிருப்பில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஒருவர் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.... சிவகாசி அம்மன் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் கௌதம் 27. இவரது வீட்டின் மாடி அறையில் இன்று திடீரென பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. அப்போது வீட்டின் மாடியறையில் இருந்த கௌதம் பலத்த தீக்காயமடைந்துள்ளார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் கௌதமை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் 80 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெறுகிறார். சம்பவம் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். மேலும் அங்கு ஏராளமான பட்டாசுகள் வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது. சட்ட விரோதமாக வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டதா அல்லது ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 9ம் தேதி சாத்தூர் அருகே தாயில்பட்டியில் குடியிருப்பில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் இன்று சிவகாசியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பட்டாசு வெடித்து சிதறி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.