அரசின் திட்டங்களை பயன்படுத்தி விவசாயிகளின் வாழ்க்கைத்தரம்* *உயரும்போதுதான் அரசின் நோக்கம் நிறைவேறுவதாக* *அர்த்தம்-உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு* *கண்காட்சி மற்றும் கருத்தரங்கி

அரசின் திட்டங்களை பயன்படுத்தி விவசாயிகளின் வாழ்க்கைத்தரம்* *உயரும்போதுதான் அரசின் நோக்கம் நிறைவேறுவதாக* *அர்த்தம்-உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு* *கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை* *தொடங்கி வைத்து* *மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பேச்சு*;

Update: 2025-08-19 13:50 GMT
அரசின் திட்டங்களை பயன்படுத்தி விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும்போதுதான் அரசின் நோக்கம் நிறைவேறுவதாக அர்த்தம்-உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பேச்சு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், தோணுகால் அசேபா வளாகத்தில் வேளாண்மைத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டு பின் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.பின்னர் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.9.02 இலட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய பவர் டில்லர், பவர் வீடர், சுழல் கலப்பை உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை வழங்கினார்.கருத்தரங்கில் பேசிய ஆட்சியர்,உயிர்ம வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி என்பது வேளாண்மையினருக்கு முக்கியமான நிகழ்வு ஆகும் என்றும் இன்றைய மனிதன் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான தேவை இயற்கை உணவாகும். இயற்கையோடு இணைந்து நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்வதே உயிர்ம வேளாண்மையின் நோக்கமாகும் என்றும் அரசின் திட்டங்களை பயன்படுத்தி விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும்போதுதான் அரசின் நோக்கம் நிறைவேறுவதாக அர்த்தம் என்றார். இந்நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை குறித்த தொழில் நுட்பங்கள் குறித்தும், புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், வேளாண் மற்றும் வேளாண் துறை சார்ந்த துறைகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் பல்வேறு கருத்துக்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News