அரசு மருத்துவமனை போதை மீட்பு மையத்தில் பாராட்டு விழா
அரசு மருத்துவமனை போதை மீட்பு மையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது;
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனநலத் துறை சார்பில் கலங்கரை குடி, போதை மீட்பு மையம் மூலம் செயல்பட்டு வருகிறது இங்கு முற்றிலும் இலவசமாக குடி மற்றும் போதை மீட்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இலவச உணவு, நூலக வசதி, பொழுது போக்கு, விளையாட்டு, மருந்துகள், யோகா, குழுப்பயிற்சி, ஆலோசனை மற்றும் அறிவுரை பகிர்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 50 மேற்பட்ட நபர்கள் குடி போதையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவ்வாறு மீண்டு வந்தவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பாராட்டு விழா மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் டாக்டர்கள் பத்மநாபன், சைலஸ் ஜெபமணி, அப்துல் ரகுமான், ஸ்ரீராம் மற்றும் கலங்கரை மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் இச்சேவை பற்றி அறிந்து கொள்ள 94877 58295 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.