மேலூர் ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் தூய்மைப்பணி

மேலூர் ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் தூய்மைப்பணி;

Update: 2025-08-20 00:48 GMT
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி என்எஸ்எஸ் மாணவர்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். நிகழ்ச்சிக்கு ரயில் நிலைய முதன்மை வணிக ஆய்வாளர் உத்திர முருகன் தலைமை வகித்தார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் சுப்பிரமணிய சுபாஷ், கே.டி. கோசல் ராம் பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் மான்சிங், பயணிகள் நலச்சங்கத் தலைவர் அ. கல்யாணசுந்தரம், செயலாளர் மா.பிரமநாயகம், உறுப்பினர் ஆர். ராஜ்மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News