உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு;
தூத்துக்குடி கீதாநகரில் உள்ள கீதாமெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி தெற்கு மண்டலம் பகுதியில் உள்ள 55,56, 57 ஆகிய வார்டுகளுக்கான மக்கள் மனுக்களை அளித்தனர். முகாமை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில், அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். பின்னர் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் பொது விநியோக திட்ட பெயர் திருத்தம் ஆகிய ஆணைகளை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ, தாசில்தார் முருகேஸ்வரி, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், தெற்கு மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, கவுன்சிலர்கள் ராஜதுரை, சுயம்பு, பகுதி செயலாளர் மேகநாதன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.