ஆயுதப்படை காவலர்களுக்கான குறை தீர்வு முகாம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் பங்கேற்பு

ஆயுதப்படை காவலர்களுக்கான குறை தீர்வு முகாம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் பங்கேற்பு;

Update: 2025-08-20 00:55 GMT
தூத்துக்குடியில் ஆயுதப்படை காவல்துறையினருக்கான குறை தீர்க்கும் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஆயுதப்படை காவலர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஆயுதப்படையைச் சேர்ந்த தலைமை காவலர்கள் முதல் காவலர்கள் வரை உள்ள 24 காவல்துறையினர் தங்கள் குறைகள் மீதான மனுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரடியாக தெரிவித்தனர். மனுமீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்தார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News