போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனை
ஒட்டன்சத்திரத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்;
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த தின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆண்டிவேல் மகன் செல்லப்பாண்டி(58) என்பவரை ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி தலைமையிலான போலீசார், அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று நீதிபதி அவர்கள், செல்லப்பாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.