மின்னாம்பள்ளி பிரிவில் டூவீலர் மீது கார் மோதி விபத்து.

மின்னாம்பள்ளி பிரிவில் டூவீலர் மீது கார் மோதி விபத்து.;

Update: 2025-08-20 12:31 GMT
மின்னாம்பள்ளி பிரிவில் டூவீலர் மீது கார் மோதி விபத்து. சேலம் மாவட்டம் காளி கவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் 27 . இவர் ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் நெரூரிலிருந்து கரூர் செல்லும் சாலையில் அவரது டூ வீலரில் சென்றார். மின்னாம்பள்ளி பிரிவு அருகே வந்த போது எதிர் திசையில் கரூர் முத்தலாடம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் வயது 26 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் தினேஷ் குமார் டூ வீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. தினேஷ்குமாரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சம்பவம் குறித்து தினேஷ் குமார் சகோதரி தேன்மொழி வயது 30 அளித்த புகாரில் கார் டிரைவர் ஜெகநாதன் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Similar News