டெக்ஸ் பார்க் அருகே முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக் கிட்டதால் டூ வீலர் மோதி விபத்து.
டெக்ஸ் பார்க் அருகே முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக் கிட்டதால் டூ வீலர் மோதி விபத்து.;
டெக்ஸ் பார்க் அருகே முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக் கிட்டதால் டூ வீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் க. பரமத்தி ஆரியூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் வயது 33. இவர் ஆகஸ்ட் 18 அன்று மதியம் மூன்று மணி அளவில் திண்டுக்கல் - கரூர் சாலையில் டூ வீலரில் சென்றார். இவரது வாகனம் டெக்ஸ் பார்க் அருகே வந்தபோது இவருக்கு முன்பாக கேரள மாநிலம் நெல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் வயது 38 என்பவர் வேகமாக ஓட்டிச் சென்ற லாரியை எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் திடீரென பிரேக் இட்டதால் பிரபாகரன் டூவீலர் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த பிரபாகரனை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து அரவக்குறிச்சி காவல் துறையினர் விபத்து ஏற்படும் வகையில் லாரியை ஓட்டிய முரளி கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்