ஒண்டிவீரனின் படத்திற்கு அமைச்சர் மாலை அணிந்து மரியாதை
முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் ஒண்டிவீரனின் நினைவுதினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரனின் திருவுருவ படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்;
முதல் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அவரின் திரு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த மாவீரர் ஒண்டிவீரனின் திரு உருவப்படத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஏராளமான திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா மண்டல தலைவர் நிர்மல்ராஜ் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார் பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்