ராசிபுரம் அருகே கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு. ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி...

ராசிபுரம் அருகே கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு. ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி...;

Update: 2025-08-20 15:33 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மொஞ்சனூர் அருகே உள்ள பாலமேடு கிராமத்தில் கடந்த 1 வருட காலமாக சிவகாமி(32) என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று காலை சுமார் 10 மணியளவில் பாலமேடு அருகே உள்ள காட்டுபாளையம் பகுதியில் மணல் அள்ளுவதாக கிராம நிர்வாக அலுவலர் சிவகாமிக்கு தகவல் வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சிவகாமி பார்வையிட்டு உள்ளார். அங்கு மணல் அள்ளும் கும்பலிடம் மணல் அள்ளுவதற்கு உரிமம் உள்ளதா என கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் கூறப்படுகிறது.பின்னர் சம்பவ இடத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி பணியை முடித்துவிட்டு தனது வீட்டில் இருந்தபோது சுமார் இரவு 8.40 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கிராம நிர்வாக அலுவலர் வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான சிவகாமி தற்போது ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலுக்கு உள்ளான கிராம நிர்வாக அலுவலர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்... இதுகுறித்து தாக்குதலுக்கு உள்ளான கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி(32) கூறுகையில்,தனக்கு நேற்று காலை சுமார் 10 மணி அளவில் பாலமேடு பகுதியில் மணல் அள்ளுவதாக பொதுமக்களிடம் அழைப்பு வந்ததாகவும் அதனை சென்று பார்த்த போது போலியான உரிமம் வைத்துக் கொண்டு மணல் அள்ளுவதாகும் தெரியவந்தது.இதனை அடுத்து உடனடியாக தான் மணல் அள்ளுவதை நிறுத்த வேண்டும் என கூறியதாகவும், இதனை வேறு ஒரு நபருக்கு அங்கிருந்து நபர்கள் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தி உள்ளனர். பின்னர் சுமார் 8.40 மணியளவில் தான் வீட்டில் தனது குழந்தைகள் மற்றும் மாமியாருடன் இருந்தபோது சீனிவாசன் என்ற நபர் தன்னை வீடு புகுந்து தனது தலை முடியை இழுத்து கீழே தள்ளிவிட்டு தனது நெஞ்சு பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் இதுபோன்ற கிராம நிர்வாக அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்...

Similar News