சூலூரில் மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி !
கோவை மாவட்டம் சூலூர் அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
கோவை மாவட்டம் சூலூர் அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூலூர் மருதப்ப தேவர் தெருவை சேர்ந்த கலையசெல்வி (25) என்ற இளம்பெண், துணிகளை எடுக்க மாடிக்கு சென்றபோது மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை உடனே மீட்டு சூலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவரது தாயார் அம்சவெணி அளித்த புகாரின் பேரில் சூலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த கலையசெல்வியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டுள்ளது.