எடப்பாடி மீது ஆதித்தமிழர் தலைவர் ஜக்கையன் குற்றச்சாட்டு
அதிமுக எடப்பாடி பழனிச்சாமி மீது ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் குற்றச்சாட்டினார்;
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆதித்தமிழர் கட்சி சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. இதில் ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் ஹிந்தி பேசினால் தான் இந்தியர்கள் என்றும், ஹிந்தி தெரிந்தால்தான் வேலைவாய்ப்பு என்றும் கூறுகின்றனர். ஆனால் ஹிந்தி மொழி படித்த, தெரிந்த வட மாநில மக்கள் தமிழகத்தில் பானி பூரி விற்பனை செய்கின்றனர் ஹோட்டலில் வேலை செய்கின்றனர். ஒரு காலத்தில் அருந்ததியர் சமூக மக்கள் எம்ஜிஆர் மீதும் இரட்டை இலை மீதும் பற்றுக் கொண்டு நெஞ்சில் பச்சை குத்தினர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் செருப்பு தைப்பதற்கு பெட்டி செய்து கொடுத்தார். ஆனால் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அருந்ததியர் சமூகத்திற்கு உள் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தார். இதன் மூலமாக இந்த சமூகத்தை சேர்ந்த பல கல்வி கற்று பல்வேறு உயர் பதவிகளுக்கு வந்தனர் சென்னை மாநகராட்சியில் முதன் முதலில் 10 மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு தாரை வார்த்து 700 தூய்மை பணியாளர்களை வேலையை விட்டு அனுப்பியது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் தான். ஆனால் இன்றைக்கு தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதாக நீலி கண்ணீர் வடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி அன்றைக்கு வெள்ளையர்களுக்கு எட்டப்பர் போல இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதாக கூறும் ஓம் (நாம்) தமிழர் சீமான் ஈரோடு இடைத் தேர்தலின் போது அருந்ததியர் சமூகத்தினர் விஜயநகர பேரரசு காலத்தில் தூய்மை பணிக்காக வரவழைக்கப்பட்டதாக கொச்சைப்படுத்தி பேசினார். அருந்ததியர் சமுதாய மக்கள் ஆதி தமிழ் குடிமக்கள். வரலாறு தெரியாமல் சீமான் பேசுகிறார். வேண்டுமென்றால் நேரடி விவாதத்திற்கு சீமான் வர தயாரா என்றார.