ராசிபுரம் அருகே மொபைல் கடையில் திருட்டு.மர்ம நபர் கடையில் உள்ளே புகுந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்....
ராசிபுரம் அருகே மொபைல் கடையில் திருட்டு.மர்ம நபர் கடையில் உள்ளே புகுந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்....;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குறுக்குபுரம் பகுதியில் தமிழரசன் என்பவர் மாருதி மொபைல்ஸ் என்ற பெயரில் செல்போன்கள் விற்பனை பழுது பார்க்கும் கடை வைத்து 6 மாதமாக நடத்தி வருகிறார்.நேற்று இரவு கடையில் பணிபுரியும் ஊழியர்கள் வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.அப்போது திடீரென்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கடையின் சாட்டரை உடைத்து உள்ளே புகுந்து கடையினுள் இருந்த 9 புதிய மொபைல் போன்கள் மற்றும் சர்வீஸ்காக கொண்டுவரப்பட்ட மொபைல் போன்கள் மற்றும் ரொக்க பணம் ரூ.6000 என பல்வேறு உபரி பொருட்களும் திருடி சென்றதாக கூறப்படுகிறது.வழக்கம் போல் இன்று கடையை திறக்க வந்த கடை ஊழியர் கடையின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த உரிமையாளர் கடையில் திருட்டுப் போனது சம்பந்தமாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...