ராசிபுரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ பேச்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பக்தர்கள் தரிசனம்..
ராசிபுரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ பேச்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பக்தர்கள் தரிசனம்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காட்டூர் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி மூலவர், மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் கோவிலில் உள்ளே அமைந்துள்ள ஸ்ரீ பேச்சியம்மன் சாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகங்கள் செய்து தங்க கவசம் மஞ்சள் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதை கோவில் முறை பூசாரிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.