குமரி : மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வகுப்பறை

அரசு பள்ளியில்;

Update: 2025-08-23 05:45 GMT
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நாகர்கோவில் செட்டிகுளம் அரசு பள்ளியில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு  வகுப்பறை கட்டுவதற்கு 54 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை விழா இன்று 23-ம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்  கலந்து கொண்டு பூமி  பூஜை தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, மாவட்ட கல்விதுறை அதிகாரி பாலதண்டாயுதபாணி, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், மாநில காங்கிரஸ் செயலாளர் சீனிவாசன், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கிய ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News