கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சரோஜா தலைமை தாங்கி வரவேற்புரை வழங்கி பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்ப்பித்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு ஆணையர் முனைவர் உல. பாலசுப்பிரமணியன் விழாவில் சிறப்புரையாற்றி பட்டம் பெற தகுதியுடையோரை துறை தலைவர்கள் முன்னிலைப்படுத்த பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். இவ்விழாவில் 316 மானவ மானவியர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ் துறை தலைவர் முனைவர் சா. அமுதன், முன்னாள் மாணவர்சங்க பொறுப்பாளர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.