ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் வீடு வீடாக சென்று மக்களிடம் குறை கேட்ட அமைச்சர் மதிவேந்தன்...
ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் வீடு வீடாக சென்று மக்களிடம் குறை கேட்ட அமைச்சர் மதிவேந்தன்...;
தமிழக முதலமைச்சருக்கு பல்வேறு முகங்கள் உள்ளது,TVK தலைவர் விஜய் முதலமைச்சர் அங்கிள் எனக் கூறியதற்கு அது அவரது விருப்பம் உரிமையாக சொல்லி செல்கிறார் என அமைச்சர் மதிவேந்தன் ராசிபுரத்தில் பேட்டி... ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் வீடு வீடாக சென்று மக்களிடம் குறை கேட்டும், குறைகள் இருந்தால் தன்னை நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என கூறி அமைச்சர் மதிவேந்தன் பொது மக்களிடம் விசிட்டிங் கார்டு வழங்கினார்... தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் நேரடியாக பொதுமக்களை சந்தித்து பகுதிமக்களின் குறைகளை கேட்டு அதற்கான தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார்.இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் மதிவேந்தன் பொது மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து வரும் வகையில் இன்று ராசிபுரம் 3வது வார்டு உட்பட்ட சிவானந்தா சாலை, புதுப்பாளையம் சாலை, ஆசிரியர் நகர், அங்கம்மாள் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து பொதுமக்களிடம் குறைகளை அமைச்சர் மதிவேந்தன் கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், தெருவிளக்கு, சாக்கடை அடைப்பு, குடிநீர் நேரம் முறைகளை தெரிவிக்க வேண்டும் எனவும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தினார். அதனை தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் திமுக ஆட்சியில் ராசிபுரத்தில் கொண்டு வரப்பட்ட சாதனைதிட்டங்களை பொதுமக்களிடம் கூறியும். குறைகளை கூறிய விரைவில் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்... அதனைத் தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2 மாதமாக பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து வருவதாகவும் தற்போது ராசிபுரம் 3வது வார்டு பகுதியில் பொதுமக்களை நேரடியாக சந்தித்தும் அவர்கள் கூறும் குறைகளை குறிப்பெடுத்து மிக விரைவாக நிறைவேற்றப்படும். திமுகவை விஜய் தாக்கி பேசியதாக கேட்ட பொழுது, அவர் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளார் என்ன சொல்வது என்று தெரியாமல் ஆர்வத்தில் சொல்லி வருகிறார், அவர் மாநாட்டில் சொல்லும் கருத்துக்கள் நாகரிகமாக இல்லாட்டிலும், அவர் எப்படிப்பட்ட கருத்துக்கள் சொன்னாலும் தேர்தல் களத்தில் சந்திப்போம். தேவையில்லாமல் பதில் கூறுவது எங்களுக்கு அவசியம் இல்லை கண்டிப்பா மக்கள் மூலமாக அந்த பதில் நாங்கள் கூறுவோம். விஜய் முதலமைச்சரை அங்கிள் எனக்கூறியதற்கு கேட்டபோது, முதலமைச்சர் சின்ன குழந்தைக்கு தாத்தா, அவரது வயது உடையவர்களுக்கு அவர் நண்பர், பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அவர் அப்பா,அவர் எல்லா கட்சிக்காரர்களுக்கு தலைவர், தமிழக மக்களுக்கு அவர் முதலமைச்சர், என முதலமைச்சருக்கு என பல்வேறு முகங்கள் உள்ளது.,அது அவரது விருப்பம் உரிமையாக சொல்லிட்டு போறார். திமுகவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் வைத்தாலும் வருகின்ற 2026 தேர்தலில் வாக்குகள் மூலம் பொதுமக்கள் அதனை நிரூபிப்பார்கள் என ராசிபுரத்தில் அமைச்சர் மதிவேந்தன் பேட்டியளித்தார். இந்த நிகழ்வில் ராசிபுரம் திமுக நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர், நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர், அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்...