சங்கரன்கோவில் அருகே மாணவ மாணவிகள் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு

மாணவ மாணவிகள் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு;

Update: 2025-08-23 15:13 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியான ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன் மற்றும் கோபி அவான்ஸ் வங்கியில் வாங்கிய கடனை கட்டவில்லை என கூறப்படுகிறது. வாங்கிய கடனை கட்டாதது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இந்த நிலையில் நீதிமன்றம் பள்ளியை சீல் வைத்து ஜப்தி செய்ய உத்தரவிட்டதின் பெயரில் வங்கி அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர் ஆணையர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் பள்ளியை சீல் வைக்க வந்த நிலையில் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் பள்ளியின் தரப்பு வழக்கறிஞர் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் இதில் உடன்பாடு எட்டபடாத நிலையில் காவல்துறையினர் அனைவரையும் பள்ளியை விட்டு வெளியேற்றினர். இதனை பள்ளி அலுவலக பூட்டை உடைத்து நீதிமன்ற அலுவலர்கள் பள்ளியை சீல் வைக்க முற்பட்ட போது மாணவ மாணவிகள் பெற்றோர் ஆசிரியர் மீண்டும் உள்ளே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து பள்ளி மாணவர்கள் சிலர் மாடி மேல் ஏறி கீழே விழுந்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனை அடுத்து கீழே இறக்கப்பட்டு தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News