சிவகிரி அருகே நாய் கடித்து பெண் காயம்

நாய் கடித்து பெண் காயம்;

Update: 2025-08-24 00:42 GMT
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே தேவிபட்டணம் கீழூா் ராமசாமிபுரத்தை சோ்ந்தவா் செல்வன். அவரும், அவரது மனைவி பொன்மலரும் பைக்கில் சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனராம். தென்மலை அருகே சென்றுகொண்டிருந்த போது அங்கு சுற்றித் திரிந்த தெரு நாய், பைக்கின் பின்புறம் அமா்ந்திருந்த பொன்மலரின் காலை கடித்ததாம். இதில் அவா் காயமடைந்தாா். தென்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்ற அவா், பின்னா் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Similar News