தமுமுக நெல்லை மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 23) மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் தலைமையில் மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் ஹமீது கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி கட்சியின் 31-வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் ஆதரவற்ற இல்லங்களுக்கு உணவு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.