சொந்த செலவில் மாணவிக்கு கணினி வழங்கிய எம்எல்ஏ
அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா;
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு உட்பட்ட ஊர்க்காடு தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொன் விஜயலட்சுமி என்ற கல்லூரி மாணவிக்கு இன்று (ஆகஸ்ட் 24) அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தனது சொந்த செலவில் கணினி வழங்கினார். இந்த நிகழ்வின்பொழுது மாநில அம்மா பேரவை இணைச்செயலாளர் சிவன் பாபு உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.