சாலையோர பெட்டிக்கடையை அகற்ற அழுத்தம் கொடுக்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாற்றுத்திறனாளி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.*

சாலையோர பெட்டிக்கடையை அகற்ற அழுத்தம் கொடுக்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாற்றுத்திறனாளி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.*;

Update: 2025-08-24 14:34 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாற்றுத்திறனாளி நடத்தி வரும் சாலையோர பெட்டிக்கடையை அகற்ற அழுத்தம் கொடுக்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாற்றுத்திறனாளி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ராமலட்சுமி என்பவர் கணவனை இறந்த பிறகு விதவை மறுமணம் செய்துள்ளார். கணவருக்கு உதவி செய்யும் நோக்கத்தில் அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடை போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி நகராட்சி துறையினர் கடையை அகற்ற அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் தொடர்ந்து கடையை நடத்த அனுமதி கேட்டு நகராட்சிக்கு மனு அனுப்பியுள்ளார். இந்த நிலையில் கடை அகற்றப்படும் என அதிகாரிகள் எச்சரித்ததாக கூறி மாற்றுத்திறனாளி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதே இடத்தில் கடையை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரியும், நகராட்சியை நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Similar News