வாசவி கிளப் ராசிபுரம் மற்றும் வாசவி கிளப் வனிதா சார்பில் சர்வதேச தலைவருக்கு பாராட்டு..
வாசவி கிளப் ராசிபுரம் மற்றும் வாசவி கிளப் வனிதா சார்பில் சர்வதேச தலைவருக்கு பாராட்டு..;
வாசவி கிளப் ராசிபுரம் மற்றும் வாசவி கிளப் வனிதா இராசிபுரம் சார்பாக சர்வதேச தலைவரின் நல்லெண்ண விஜயம் இராசிபுரம் வாசவி மஹாலில் நடைபெற்றது. அது சமயம் பல சேவை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. வாசவி கிளப் இராசிபுரம் சார்பாக மல்லூர் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு பீரோ மற்றும் மதிய உணவிற்கு 100 சில்வர் தட்டுகள் மற்றும் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் நான்கு மாணவர்களுக்கு படிப்பிற்கு நிதி உதவியும் வழங்கினர். வாசவி கிளப் வனிதா ராசிபுரம் சார்பாக வெள்ளக்கல்பட்டி அரசினர் பள்ளிக்கு பீரோ, மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் NIEPID KIT, மற்றும் ஐந்து மாணவர்களுக்கு கல்விக்கு நிதி உதவியும் வழங்கினர். இந்த நிகழ்வில் சர்வதேச தலைவர் விஎன் எர்கிலா இராமகிருஷ்ணா மற்றும் மாவட்ட ஆளுநர் விஎன் விஜயா சங்கல்ப் கேசிஜிஎப் ஏ. வெங்கடேஷ்வரா குப்தா மற்றும் முதல் பெண் அமைச்சரவை பொருளாளர் விஎன் 2 கேசிஜிஎப் வி. ரேவதி மற்றும் அமைச்சரவை செயலாளர் விஎன் 2, கேசிஜிஎப் எம். வசந்தி அவர்கள் மற்றும் மண்டலத் தலைவர் விஎன் கேசிஜிஎப் ஸ்ரீ லஷ்மி பிரியா மற்றும் மண்டலத் தலைவர் டி. சந்தியா, மண்டல இயக்குனர் விஎன் கேசிஜிஎப் எஸ். ஹரிராம் துணை ஆளுநர் விஎன் சில்வர் துணை ஆளுநர் விஎன் சில்வர் கேசிஜிஎப் ஸ்ரீ மதி வாசன் விஎன் கேசிஜிஎப் சதீஷ் குமார் மற்றும் வாசவி கிளப் நிர்வாகிகள் தலைவர் விஎன் கேசிஜிஎப் பி. மணிகண்டன், செயலாளர் விஎன் கேசிஜிஎப் ஆர். பாலாஜி, பொருளாளர் விஎன் கேசிஜிஎப் ரமேஷ் . மற்றும் வாசவி கிளப் வனிதா ராசிபுரம் நிர்வாகிகள் பூர்ணிமா, உமா லஷ்மி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.