நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 25) மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் கனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த மிஷன் ரேபிஸ் இயக்கத்தை செயல்படுத்த வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.