வேலூர் வாரச்சந்தை வெள்ளிக்கிழமை செயல்படும்.
வாரச்சந்தை வெள்ளிக்கிழமை செயல்படும் பரமத்திவேலூர் பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு.;
பரமத்திவேலூர், ஆக.28- பரமத்திவேலூரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்து முன்னணி சார்பில் 31-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறுவதால் நாளை (வெள்ளிக்கிழமை)வாரச்சந்தை செயல்படும்.எனவே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்துகொள்ளலாம். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று வேலூர் பேரூ ராட்சி செயல் அலுவலர்(பொறுப்பு)வேல்முருகன் அறிவித் துள்ளார். மேலும் வாரச்சந்தை நடைபெறுவது குறித்து தண் | டோரா மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.