கொசு பத்தி புகை நெடி காரணமாக பள்ளி மாணவியர் இருவர் மயக்கம்
கன்னிவாடியில் கொசு பத்தி புகை நெடி காரணமாக பள்ளி மாணவியர் இருவர் மயக்கம்;
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பகுதியில் சமீபகாலமாக கொசு, ஈக்கள் தொல்லை அதிகரித்து வந்ததால் பள்ளி நேரங்களில், சில வகுப்புகளில் கொசு பத்தி கொளுத்தி வைக்கின்றனர். 10ம் வகுப்பில் கொசுவத்தி புகை நெடி காரணமாக, 2 மாணவியர் மயக்கம் அடைந்தனர். பெற்றோருக்கு தகவல் தெரிவித்த பள்ளி ஆசிரியர்கள், மாணவியரை கன்னிவாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர். இதில் ஒரு மாணவிக்கு மயக்கம் தெளிந்தது. மற்றொரு மாணவி, மயக்கம் தெளியாத நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.