சேற்றில் சிக்கிய பள்ளி மாணவன் பலி
மதுரை அருகே கண்மாயில் சேற்றில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.;
மதுரை பசுமலை கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த டேவிட் ராஜ் நாகம்மாள் தம்பதியரின் மகன் நவீன் குமார் ( 15) என்பவர் பசுமலை சிஎஸ்ஐ பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் . இவர் நேற்று (ஆக.30) ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து அருகேயுள்ள மாடக்குளம் கண்மாயில் குளிக்க சென்றபோது சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.