மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்
நத்தம் என்.பி.ஆர். கல்லூரியில் மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்;
நத்தம் என்.பி.ஆர். கல்லூரியும், திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கமும் இணைந்து 5-வது மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடத்தியது. இதில் 14,16,18. 20 வயதுக்குட்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் நீளம் தாண்டுதல் குண்டு எறிதல் ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதனையடுத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத் தலைவர் துரை ரெத்தினம், செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.பி.ஆர். கல்லூரி முதல்வர் சரவணன் வரவேற்று பேசினார். திண்டுக்கல்லை சேர்ந்த ஆர்ட்ஸ் டிரஸ்ட் அத்தலடிக் கிளப் அணி 136 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை தட்டி சென்றது.