மலைக்கோவிலூர் அருகே டூவீலருடன் நின்றவர் மீது கார் மோதி ஒருவர் உயிரிழப்பு.

மலைக்கோவிலூர் அருகே டூவீலருடன் நின்றவர் மீது கார் மோதி ஒருவர் உயிரிழப்பு.;

Update: 2025-09-01 13:02 GMT
மலைக்கோவிலூர் அருகே டூவீலருடன் நின்றவர் மீது கார் மோதி ஒருவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா மோளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி வயது 65. இவர் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:30 மணி அளவில் மதுரை-கரூர் சாலையில் மலைக்கோவிலூர் அருகே தனது டூவீலர் உடன் சாலையோரம் நின்று இருந்தார். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூர் மாரிக்கொண்டன ஹள்ளி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் வயது 60 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் கந்தசாமி மீது மோதி அருகில் நின்று கொண்டிருந்த பீகாரைச் சேர்ந்த வாலிபர் ரோஷன் என்பவர் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது. இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் கந்தசாமியை உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த ரோசனை கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த கந்தசாமியின் உறவினர் பெரியசாமி அளித்த புகாரில் விபத்து ஏற்படுத்திய மாரியப்பன் மீது அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News