கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலி
மதுரை மாவட்டம் சாப்டூரில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலியானார்;
மதுரை மாவட்டம் பேரையூர் சாப்டூரில வசிக்கும் சுந்தர தேவரின் மகன் சக்திவேல்(70) என்பவர் கடந்த நேற்று முன்தினம்( ஆக.30) மதியம் 1 மணியளவில் அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் குடிப்பதற்காக இறங்கிய பொழுது எதிர்பாராத விதமாக விழுந்ததில் உயிரிழந்தார். இது குறித்து அவரது மகள் சாப்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.