பட்டுக்கோட்டையில், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கல்

நலவாரிய அட்டை;

Update: 2025-09-01 15:13 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலை அய்யனார் கோயில் வளாகத்தில், கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு, கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் வி.ராமு தலைமை வகித்தார். செயலாளர் ஏ.செல்வராஜ், பொருளாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு, 10 தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டைகளை வழங்கி, ஆலோசனை வழங்கிப் பேசினார். 50 க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News