தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர்

மதுரையில் அமைச்சர் தொகுதி மக்களிடம் குறைகளை கேட்கறிந்தார்;

Update: 2025-09-02 10:11 GMT
மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீசி வீதி பகுதிகளில் உள்ள தெருக்களில் இன்று (செப்.2)அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மக்கள் குறைகளை கேட்டார். தங்களது வீதிகளில் குடிநீர் சாக்கடை கலந்து வருவதாக மக்கள் தெரிவித்த நிலையில் ஒரு வீட்டில் தண்ணீர் வாங்கி சாக்கடை வாடை வருகிறதா? என்று சோதித்தார். அதன் பின்னர் மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனுடன் விவாதித்தார். பின்பு இது போன்ற பிரச்சனை வராது என்று அப்பகுதி மக்களுக்கு உறுதி அளித்தார். அமைச்சர் சென்ற பகுதிகளில் அங்குள்ள மக்கள் அவருக்கு ஆராத்தி எடுத்து வரவேற்பளித்தனர். இந்நிகழ்வில் மேயர் இந்திராணி கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

Similar News