அதிமுகவினரின் பிளக்ஸ் பேனர்களால் பொதுமக்கள் அதிருப்தி
மதுரை மேலூரில் சாலையின் இருபுறங்களிலும் அதிமுகவினர் வைத்துள்ள பேனர்களால் பொதுமக்கள் அிருப்தி அடைந்துள்ளனர்.;
மதுரை மாவட்டம் மேலூரில் இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணம் நடைபெறவுள்ளது. இதற்காக மேலூர் அதிமுக நிர்வாகிகள் பலர் பேருந்து நிலைய பகுதியில் சாலையின் இருபுறமும் கடைகளை மறைத்து நீண்ட பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். இதனால் கடைக்காரர்கள் சொல்லமுடியாத வேதனையில் உள்ளனர்.பேருந்து நிலையம் எதிரே மூன்று பெரிய கட்அவுட் வைத்திருக்கின்றனர். காற்றில் எப்போது விழுமோ? என்ற அச்சத்துடனே அப்பகுதிக்கு மக்கள் செல்கின்றனர். அதிமுகவினர் இத்தகைய செயல்பாடு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.