குன்றத்து முருகன் மதுரை வருகை
மதுரையில் நடைபெறும் ஆவணி மூல திருவிழாவில் கலந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றம் முருகன் இன்று மதுரை வந்தடைந்தார்.;
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் நாளை செப்.3ல் ஆரப்பாளையம் பகுதியில் நடைபெறும் பிட்டுக்கு மண் சுமந்த லீலையில் பாண்டிய மன்னனாக பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து முருகன் இன்று செப்.2ம் தேதி காலை 8.30 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு புறப்பட்டார்.