அகிலாண்டபுரத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு.
அகிலாண்டபுரத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு.;
அகிலாண்டபுரத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு. கரூர் மாவட்டம் வைரமடை அருகே அகிலாண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி மனைவி நாச்சம்மாள் வயது 79. இவரது உறவினர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை.இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டுள்ளார். தற்போது தனியாக வாழ்ந்து வந்த நாச்சம்மாளுக்கு கடந்த மாதம் 14ம் தேதி மீண்டும் மார்பு வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணியிலிருந்து 11 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இந்த சம்பவம் அறிந்த நாச்சம்மாளின் உறவினர் திருப்பூரைச் சேர்ந்த பங்கஜம் அளித்த புகாரில் தென்னிலை காவல் துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.