மலைக்கோவிலூர் - கார் மோதிய விபத்தில் சிறுமி படுகாயம்.

மலைக்கோவிலூர் - கார் மோதிய விபத்தில் சிறுமி படுகாயம்.;

Update: 2025-09-02 11:15 GMT
மலைக்கோவிலூர் - கார் மோதிய விபத்தில் சிறுமி படுகாயம். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா நாகம்பள்ளி வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் சத்யா வயது 16. இவர் கடந்த புதன்கிழமை அன்று கரூர் - மலைக்கோவிலூர் சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது சர்வீஸ் சாலையில் திருப்பூர் மாவட்டம் கருக்கம்பாளையம் அருகே பாரப்பாளையத்தை சேர்ந்த ஹரிபிரசாத் வயது 40 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் சத்யா மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக சத்யா அளித்த புகாரில் விபத்து ஏற்படுத்திய ஹரிப்பிரசாத் மீது அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News