தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டய படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.... தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்
பட்டயப்படிப்பு;
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகளை வழங்கி வருகிறது. இதில் பல கட்ட கலந்தாய்வுகள் மூலம் மாணவர்கள் சேர்க்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் கணிசமான எண்ணிக்கையில் காலி இடங்கள் இன்றும் உள்ளது. அதன் விவரங்கள் பின் வருமாறு . அரசு நிறுவனங்கள் வேளாண் நிறுவனம் தேசிய பயிறு வகை ஆராய்ச்சி நிலையம் வம்பன் புதுக்கோட்டை. பட்டய படிப்பு (வேளாண்மை) 7. வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் குமிழூர் திருச்சிராப்பள்ளி பட்டய படிப்பு (வேளாண்மை) 74. தோட்டக்கலை நிறுவனம் பேச்சிப் பாறை பட்டய படிப்பு (தோட்டக்கலை) 24. வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் குமிழூர் திருச்சிராப்பள்ளி பட்டய படிப்பு (வேளாண்மை பொறியியல்) 27 காலியிடங்களும் உள்ளன. இணைப்பு அரசு கல்லூரிகள் தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிறுவனம் மாதவரம் சென்னை பட்டய படிப்பு (தோட்டக்கலை) 6. காய்கறிகளுக்கான சிறப்பு மையம் ரெட்டியார்சத்திரம் திண்டுக்கல் பட்டய படிப்பு (தோட்டக்கலை) 8. தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் கிருஷ்ணகிரி பட்டய படிப்பு (தோட்டக்கலை) 13 காலியிடங்களும் உள்ளன. இணைப்பு தனியார் கல்லூரிகள் எம்.ஐ.டி தோட்டக்கலை அறிவியல் பள்ளி முசிறி திருச்சி பட்டய படிப்பு (தோட்டக்கலை) 46. ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண் நிறுவனம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் பெரியநாயக்கன்பாளையம் கோயம்புத்தூர பட்டய படிப்பு (வேளாண்மை) 29. அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்ப நிறுவனம் திருவண்ணாமலை பட்டய படிப்பு (வேளாண்மை) 37. ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி கலவை, ராணிப்பேட்டை பட்டய படிப்பு (தோட்டக்கலை) 37. எம் ஐ டி வேளாண்மை அறிவியல் கல்லூரி பள்ளி முசிறி திருச்சி பட்டய படிப்பு (வேளாண்மை) 52. ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி கலவை ராணிப்பேட்டை பட்டய படிப்பு (வேளாண்மை) 57. பிஜேபி வேளாண்மை அறிவியல் கல்லூரி நாமக்கல்பட்டய படிப்பு (வேளாண்மை) 41. சகாயத் தோட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண்மை நிறுவனம் ராணிப்பேட்டை பட்டய படிப்பு (வேளாண்மை) 44 மொத்தம் 502 காலியிடங்களும் உள்ளன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் டிப்ளமோ பாடப்படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் ஆதார் அட்டை, பள்ளி சான்றிதழ்கள் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகியவற்றுடன் கீழ்க்காணும் இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். 1) https://tnau.ucanapply.com 2)https://tnau.ac.in 3)ugadmissions@tnau.ac.in