போச்சம்பள்ளியில் மின்னணு முறையில் கொப்பரை தேங்காய் ஏலம்

போச்சம்பள்ளியில் மின்னணு முறையில் கொப்பரை தேங்காய் ஏலம்;

Update: 2025-09-03 00:02 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு முறையில் கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. இதில் 5,241 கிலோ கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்காக விவசாயிகள் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வந்திருந்தனர். இந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிக பட்சமாக ரூ.217.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.60-க்கு விற்பனை ஆனது ரூ.10 லட்சத்து 81 ஆயிரத்து 739-க்கு ஏலம் போனது.

Similar News