சிகிச்சை பெறுபவர்களை சந்தித்த துணை மேயர்
திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு;
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே நேற்று முன்தினம் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவ்வாறு சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு நேரில் சந்தித்து நலம் விசாரித்து மருத்துவர்களிடம் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார். இதில் துணை மேயர் ராஜுவின் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.