பேருந்து ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை திருப்பரங்குன்றம் அருகே பேருந்து ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2025-09-03 01:52 GMT
மதுரை அருகே அம்மாபட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (41) என்பவர் திருப்பரங்குன்றம் அரசு பேருந்து பணிமனையில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி துளசி. இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் (செப்.1) வேலைக்கு சென்று விட்டு வந்த பிறகு உச்சபட்டிக்கு சென்றுள்ளார். அங்கு கண்மாய் கரையை அருகே குப்பை கிடங்கில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.---

Similar News