கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு கால் கோள் விழா-செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு கால் கோள் விழா-செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.;

Update: 2025-09-03 07:49 GMT
கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு கால் கோள் விழா-செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். சமூக முன்னேற்றத்திற்காகவும், கழகப் பணியிலும் முழுமையாக அர்ப்பணிப்புடன் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றும் கழக தொண்டர்களை, நிர்வாகிகளைக் கௌரவிக்கும் வண்ணம் ஆண்டு தோறும் திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழா வரும் 17ஆம் தேதி துவங்கி மூன்று நாட்கள் கரூர் அடுத்த கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை துவக்கும் முகமாக இன்று அப்பகுதியில் கால்கோள் விழா முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. அப்போது முகூர்த்த காலுக்கு மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முகூர்த்த கால் அப்பகுதியில் நிறுவி முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம் இளங்கோ சிவகாமசுந்தரி மற்றும் மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Similar News