மலையம்பாளையம்-மகனுடன் டூவீலரில் சென்றபோது டயர் வெடித்து விபத்து.

மலையம்பாளையம்-மகனுடன் டூவீலரில் சென்றபோது டயர் வெடித்து விபத்து.;

Update: 2025-09-03 09:07 GMT
மலையம்பாளையம்-மகனுடன் டூவீலரில் சென்றபோது டயர் வெடித்து விபத்து. கரூர் காந்திகிராமம் தமிழ்நாடு ஹவுஸிங் போர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுனில் குமார் வயது 32.இவரது தந்தை செல்வராஜ் வயது 60 முன்னாள் ராணுவ வீரர். இருவரும் புதன்கிழமை மாலை ஆறு மணி அளவில் கரூர் -சேலம் சாலையில் டூவீலரில் சென்றனர். செல்வராஜ் வாகனத்தை ஓட்டி சென்றார். இவர்களது வாகனம் மலையம்பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது டூவீலரின் முன்னாள் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்துடன் இருவரும் கீழே விழுந்ததில் செல்வராஜுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அவரை சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து சுனில் குமார் அளித்த புகாரில் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News