திருச்சுழி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, ஆய்வு செய்தார்

திருச்சுழி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2025-09-03 14:35 GMT
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் இன்று(03.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் மறவர் பெருங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களின் தரம் குறிந்து பணியாளர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மறவர் பெருங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் சென்னிலைக்குடி ஊராட்சியில் புதிதாக தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் ரூ.6.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு, கட்டுமான பணிகள் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News